கருத்துருவாக்கம் முதல் இறுதி முன்னோட்டம் வரை.
இலங்கையில் பெண்கள் தங்கள் பாலினம் காரணமாக பல மனித உரிமை வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். பாலின அடிப்படையிலான வன்முறை என்பது பெண்களை அதிகளவில் பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மனித உரிமைப்பிரச்சினை என்பதனை பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. பெண்கள் நல்வாழ்வு ஆய்வின்படி(Women’s Wellbeing Survey (2019), ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதற்கு காரணம் வைத்துள்ளனர் என்று 35.3 சதவீதமான இலங்கையைச் சேர்ந்த பெண்கள் ஒப்புக்கொண்டனர். ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்று 47.5 சதவீத பெண்கள் நம்புகின்றனர். இவ்விடயமானது கணிசமான பெண்கள் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் அடக்குமுறையை ஒரு கருத்தியல் சார்ந்த பிரச்சினையாகக் கருதமுடியுயும் என அறிவுறுத்துகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் (20.4%) தங்கள் வாழ்நாளில் நெருங்கிய துணையினால் உடல் மற்றும் /அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்தமை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலான பெண்கள் ஆண்களின் கட்டுப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இளம் பெண்கள்…
பாலினம் சார்ந்த குறும்பட உருவாக்கம் பல முக்கிய பண்புகளை பிரதிபலிக்கும். அவற்றில் சில பின்வருமாறு : பாலின மாறாத்தன்மையை வலுப்படுத்தாமை. பல்வேறு பாலின குழுக்களின் கதாபாத்திரங்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல். பாரம்பரிய பாலின பாத்திரங்களை அங்கீகரிக்காமை. பெண்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட பாலின குழுக்களின் குரல் மற்றும் வாழ்ந்த அனுபவத்தை போதுமான அளவில் உரையாற்றுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்தல். தைரியமாகப் பாலின நெறிமுறைகளை சவால் செய்தல் மற்றும் பாலின பன்முகத்தன்மையை முன்னிலைப்படுத்தல். பாலினம்சார்ந்த மொழியை பயன்படுத்தல் பெண்கள் மற்றும் பிற பாலின குழுக்களை பாலினத்திற்கு ஏற்ற வகையில் சித்தரித்தல்.
குறும்படம் என்பது பெண்களின் வாழும் யதார்த்தத்தைப் படம்பிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த உருமாற்றக் கருவிகளில் ஒன்றாகும். அது அவர்களுக்காகக் குரல் கொடுக்ககூடியது, அவர்களின் விடயங்கள் கேட்கப்படகக்கூடியவை என உணரவைக்கக் கூடியது. அவர்களின் குரல் மிகவும் முக்கியமானது என்ற ஆழமான உணர்வுடன் அவர்களை வலுப்படுத்தக்கூடியது. குறும்படங்கள் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் அமைப்புக்களுக்கு சவால்விடும் மற்றும் சமத்துவத்தின் குரலை எதிரொலிக்ககூடியன. பெண்களை கீழ்த்தரமான, பலவீனமான மற்றும் அதிகாரம் குறைந்த நிலைக்குத் தள்ளும் ஆணாதிக்க அமைப்புக்களை சித்தரித்து பெரிய மாற்றுகளை நிறுவும் சக்தியும் அவைகளுக்கு உண்டு. மிக முக்கியமாக, உணர்ச்சிகரமான ஈடுபாட்டின் மூலம் மக்களை மாற்றும் ஊடகமாக சினிமா பரவலாக பயன்படுத்தப்படுவதால் உணர்ச்சிகரமான கதை சொல்லல் மூலம் மக்களின் பார்வைகளையும் வாழ்க்கையையும் மாற்றும் கடமையை குறும்படங்களால் செய்யமுடியும்.
குறும்படம் என்றால் என்ன? குறும்படம் என்றால் என்ன என்பதற்குப் பல வரையறைகள் இருக்கலாம். சிலர் காலத்தின் அடிப்படையில் அதை வரையறுக்கலாம். சிலர் அதை முழுநீளத் திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் வரையறுக்கலாம். இருப்பினும் சுருக்கமாக ஒரு குறும்படம் என்பது ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட செறிவான ஒலி ஒளிக் கதையாகும். இது முக்கிய கதாபாத்திரத்தின் ஒரு குறிப்பிட்ட பயணத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு திரைப்படத்துடன் ஒப்பிடும்போது ஒரு குறும்படத்தின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்புகள் எவை? கால அளவு குறுகியது (வழக்கமாக 40 நிமிடங்களுக்கும் குறைவானது). ஆனால் பலர் சராசரியாக 10-20 நிமிடங்கள் வரை குறும்படங்களை உருவாக்குகின்றனர். நீங்கள் ஏதேனும் சர்வதேச திரைப்பட விழாக்களை இலக்காக கொண்டால், அதற்கேற்றவாறு கால அளவு மாறுபடலாம். தொடர்ச்சியான சம்பவங்களால் உருவாக்கப்படும் சிக்கலான கதைகள் அல்லது கதைக்களங்களைக் கொண்டுள்ள முழுநீளத் திரைப்படங்களுக்கு மாறாக குறும்படங்கள் ஒற்றை அல்லது ஒரு முக்கிய சம்பவத்தை கொண்டதாக இருக்கும். குறும்படமானது ஓர் மையக்கதாபாத்திரத்தின் குறுகிய காலப்பயணத்தை…
சக்திவாய்ந்த கதை யோசனைகளை உருவாக்க பல வழிகள் இருக்கலாம். ஓவ்வொரு குறும்பட இயக்குனரும் ஒரு கதை யோசனையுடன் வருவதற்கான அவர்களது தனிப்பட்ட வழிமுறைகள் உள்ளது. இதற்கு நிலையான விதிமுறை எதுவும் இல்லை. நீங்கள் ஒரு கதைக்கான யோசனையை உருவாக்க முயற்சிக்கும்போது அதிகமான யோசனைகளின் பட்டியல் உருவாக்கப்படலாம். உங்கள் திரைப்பட தயாரிப்பு பயணத்தை தொடங்கும் முன் ஓர் குறிப்பிட்ட சக்திவாய்ந்த கதையினை நீங்கள் பெறுவது முக்கியமாகும். அதை நீங்கள் எவ்வாறு செய்யமுடியும்? எதாவது தந்திரம் உள்ளதா? இல்லை! ஆனால் முறைகள் உள்ளன. உங்களுக்காக எங்களிடம் சில நிரூபிக்கப்பட்ட முறைகள் உள்ளன. நீங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் ஒன்றை முயற்சி செய்யலாம். அல்லது, உங்களுக்கு தெரிந்த வேறு எந்த முறையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். #1 நீங்கள் எதைப்பற்றி அதிகம் பேச விரும்புகின்றீர்கள்? நீங்கள் உங்கள் தாயைப்பற்றி அதிகம் பேச விரும்பலாம் ஏனெனில் அவர் உங்களிற்காக எவ்வாறான விடயங்களை பண்ணியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரது வாழ்க்கைப்பயணம்…
முந்தைய பகுதியில், பயனுள்ள கதைக்கான தூண்டுதல்களை இனங்கண்டீர்கள். உங்களிடம் இப்போது பல சிறந்த கதைக்கான யோசனைகள் இருக்கலாம். இப்பிரிவில் உறுதியான ஓர் கதை யோசனைக்கு வருவதற்கு பல யோசனைகளை நீங்கள் எவ்வாறு சுருக்கமாக்குவீர்கள் என்பதனை முக்கியமாக பார்க்கப்போகின்றோம். கேள்வி: அதை எப்படி செய்வது? ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தில் (concept) பல கதை யோசனைகளை எவ்வாறு சுருக்குவது? அல்லது பலவற்றிலிருந்து மிகவும் அழுத்தமான யோசனையை எப்படித் தேர்ந்தெடுப்பது? உங்களுக்காக எங்களிடம் சில பரிந்துரைகள் உள்ளன. #1 : மிகவும் அழுத்தமான யோசனை/ கருத்தைத் தெரிவு செய்தல். மிகவும் அழுத்தமான யோசனையை எவ்வாறு தெரிவு செய்வது? உங்கள் குழு/ நண்பர்களுடன் உங்கள் யோசனையைப் பற்றி விவாதிக்கலாம்/ கலந்தாலோசிக்கலாம் அல்லது இந்த யோசனைகளை உங்கள் நம்பகத்தனமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அது அவர்களின் யோசனைகள் மற்றும் பின்னூட்டங்களுடன் வளரக்கூடும். கூட்டுப் படைப்பாற்றல் மூலம் அது செழுமைப்படுத்தப்படும். நீங்கள் நேரில் அல்லது இணையத்தில் பொருத்தமான நபர்களுடன் கலந்தாலோசனை செய்யலாம்.…
திரைக்கதை என்னது ஒரு திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது பிற திரைக்கலை ஊடகங்களுக்காக எழுதப்பட்ட படைப்பாகும். இது கதாபாத்திரங்கள், அவர்களின் செயல்கள் மற்றும் குறிப்பிட்ட வாழ்க்கை சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது ஏற்படும் உரையாடல்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது. திரைக்கதைகள் அல்லது கதைகள் ஒரு திரைப்படத்திற்கான வரைபடமாகும். புகைப்படக்கருவியின் கண் மூலம் கதை எவ்வாறு சொல்லப்படும் என்பதை சித்தரிக்கும் வகையில் ஒரு திரைக்கதை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் எழுதப்படுகின்றது. உங்கள் திரைக்கதையை எப்படி எழுதுகிறீர்கள்? #1 : ஆய்வுப்பின்னணியை செய்தல் நீங்கள் எதையும் செய்வதற்கு முன், கதையின் கூறுகளைப் பின்னணியில் ஆய்வு செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் - கதாபாத்திரங்களின் சூழல்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகள் பற்றிய குறிப்பிட்ட விவரங்களை அறிந்து, நுண்ணறிவுகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும். நீங்கள் எப்படி படிக்கிறீர்கள்? வாசிப்புப் பொருட்களிலிருந்து (புத்தகங்கள், செய்தித்தாள்கள் முதலியன) தகவல்களைச் சேகரிக்கலாம், கதையில் உள்ள கதாபாத்திரங்கள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை…
இப்போது ஒரு குறும்படத்திற்கான நல்ல தரமான திரைக்கதை உங்களிடம் உள்ளது. அடுத்தது என்ன? இப்போது நீங்கள் தயாரிப்பிற்கு ஆயத்தமாக வேண்டும். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன், தொழிநுட்ப மற்றும் கலை அம்சங்கள் தொடர்பான சில ஆயத்த வேலைகள் உள்ளன. இது “முன் தயாரிப்பு”(Pre-Production) என அழைக்கப்படும். முன்தயாரிப்பு எனப்படுவது திரைப்பட தயாரிப்பு தொடங்கும் முன்பு செய்யப்படும் வேலைகளைக் குறிக்கின்றன. இது தயாரிப்பை வடிவமைத்தல், தொழிநுட்ப கையெழுத்துப்படிவம் தயாரித்தல், கதைச்சட்டகம் (ஸ்டோரி போர்ட்) தயாரித்தல், நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்புக்கான இடத்தேர்வு, உபகரணங்கள் மற்றும் குழுவினரை அடையாளம் காண்பது போன்ற கூறுகளை உள்ளடக்கியது. ஏளிமையாக கூறவேண்டுமானால் முன்தயாரிப்பு என்பது திட்டமிடல் நிலை ஆகும்.
#1. குறும்பட தயாரிப்பிற்கான ஸ்மார்ட் தொலைபேசிகள். சிறந்த புகைப்படக் கருவியானது உள்ளடக்கிய கையடக்கத் தொலைபேசிகள் (ஸ்மார்ட் போன்கள்) மலிவாக கிடைக்கும்வரைக்கும் வீடியோவை பதிவு செய்வது இலகுவானதொரு விடயமாக இருந்ததில்லை. ஸ்மார்ட் தொலைபேசிகளை அடிப்படையாகக் கொண்டு குறும்படத்தை தயாரிக்கும் போக்கு இலங்கை மாத்திரமின்றி உலகின் பல்வேறு இடங்களில் பரவலாகிக்கொண்டு வருகின்றது. மிகச்சிறந்த படமாக்கல் மற்றும் படத்தொகுப்புகளை கையடக்க தொலைபேசிகளில் செய்யக்கூடியதாக இருப்பதால் புதுமையான சிந்தனைகளை கொண்ட இளைஞர்களுக்கு பெண்களின் வாழ்வியலின் யதார்த்தம் மற்றும் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான குறும்படங்களை தயாரிக்ககூடியதாக இருக்கின்றது. #2. சிறந்த செயலிகளை அடையாளம் காணல். ஸ்மார்ட் தொலைபேசிகளில் வீடியோ கேமராக்கள், இலக்கமுறை புகைப்படம் எடுப்பதற்கான (digital photography) கேமராக்கள் மற்றும் ஒலிப்பதிவிற்கான செயலிகள் காணப்படுகின்ற போதிலும், இறுதி படைப்பை சிறப்பாக கொண்டுவர வல்லுனர்கள் வேறு சில செயலிகளையும் பயன்படுத்துகின்றனர். ஓர் திரைப்பட இயக்குனரின் திறனுக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்றவகையில் ஆக்கபூர்வமாக உபயோகிக்ககூடிய பல செயலிகள் காணப்படுகின்றன. …
#1 : படத்தொகுப்பு ஆன்ரொயிட் கைத்தொலைபேசியில் காணொளியை படத்தொகுப்பு செய்ய 9 படிகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுமே இறுதிவரை மிகமுக்கியமானவை. கைத்தொலைபேசியில் காணொளி படத்தொகுப்புக்கான 9 படிமுறையின் விரைவான முன்னோட்டம் இங்கே: படி 1: புதிய திட்டத்தை (New project) தொடங்குதல் படி 2: காணொளிளை தொகுப்பாக்கம்(எடிட்) செய்தல் படி 3: B- Roll ல் சேர்த்தல் படி 4: இடைமாறு (Transition) சேர்த்தல் படி 5: தலைப்புக்கள் மற்றும் தேவையான எழுத்துக்களை சேர்த்தல். படி 6: இசை மற்றும் சத்தங்களை சேர்த்தல் படி 7: ஒலியினளவை சரிசெய்யதல் படி 8: நிறத்தரத்தை சரிசெய்தல் படி 9: காணொளியை தரவேற்றம் (export) செய்தல்.
திரைப்பட விமர்சனம் என்பது ஒரு கலை. கதாப்பாத்திரம், கதைக்களம் போன்ற திரைப்படங்களின் பல்வேறு முக்கிய அம்சங்களை விவரிக்க இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுறது. சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட இயக்குனர் அல்லது திரைப்பட வகையை(genre) மையமாக கொண்டு ஒரு படத்தின் குறிப்பிட்ட அம்சங்களை விளக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. பாலினத்தை மையமாக கொண்டு ஒரு திரைப்படத்தை மதிப்பாய்வு செய்வதன் அர்த்தம் என்ன? பாலின வில்லையை பயன்படுத்துவதற்கான யோசனை ஓர் பரந்த கருத்தாக இருந்தாலும், ஒரு குறும்படத்தில், குறிப்பாக சமத்துவத்தை வளர்ப்பதற்கும், பெண்களை பாதிக்கும் பல்வேறு மனித உரிமைப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் குறும்படங்கள் தயாரிக்கப்படும்போது, மதிப்பாய்வு நிச்சயமாக பின்வரும் அம்சங்களில் கவனம் செலுத்தலாம். ஆண்களும் பெண்களும் மற்றும் ஆண்மையும் பெண்மையும் இப்படத்தில் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றன? பெண்களின் செயலற்ற தன்மையைத் திரைப்படமானது திரையில் எந்த அளவிற்கு வெளிப்படுத்துகிறது? படத்தில் பெண்கள் மற்றும் பிற பாலின நோக்குநிலை கொண்டவர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர்? பெண்களை பாலியல் பொருளாக படம் காட்டுகின்றதா? பெண்களின்…
ஒரு நல்ல சினிமா மக்கள் உலகை பார்க்கும் பார்வையை மாற்ற உதவுகிறது. ஒரு நல்ல சினிமா மக்களை அவர்களது வேறுபாடுகளுக்கு அப்பால் வலுவூட்டுகின்றது. அது ஆன்மாவின் ஆற்றலை வளப்படுத்தக்கூடியது. தமது கதை கேட்கப்பட்டதாக மக்களை உணர வைக்கின்றது. நல்ல சினிமா சில சமயங்களில் பதிலைத் தராமல் போனாலும், அது சிறந்த கேள்விகளையும் தீர்வுகளுக்கு சாத்தியமான வழிகளையும் கண்டறிய உதவுகின்றது. ஒரு நல்ல சினிமா ஒடுக்குமுறை அநீதி, பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களை உருவாக்கும் சமூக அமைப்பை சவால் செய்யகின்றது.. நீங்கள் அதிக எண்ணிக்கையிலான திரைப்படத் திரையிடல்கள் மற்றும் விவாதங்களில் கலந்து கொண்டிருக்கலாம். எனவே, இது பொதுவாக எவ்வாறு செயல்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியும். எவ்வாறாயினும், பெண்களைப் பாதிக்கும் மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை வளர்ப்பது பற்றிய யோசனைகளை உருவாக்கி, ஒரு பயனுள்ள உரையடலை மேற்கொள்ள சில உதவிக்குறிப்புகளை வழங்க விரும்புகின்றோம். குறிக்கோள்: திரைப்படத் திரையிடல்கள் பெரும்பாலும் வெவ்வேறு நோக்கங்களுக்காக ஏற்பாடு…
குறும்படம் என்பது பெண்களின் வாழும் யதார்த்தத்தைப் படம்பிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த உருமாற்றக் கருவிகளில் ஒன்றாகும். அது அவர்களுக்காகக் குரல் கொடுக்ககூடியது, அவர்களின் விடயங்கள் கேட்கப்படகக்கூடியவை என உணரவைக்கக் கூடியது. அவர்களின் குரல் மிகவும் முக்கியமானது என்ற ஆழமான உணர்வுடன் அவர்களை வலுப்படுத்தக்கூடியது. குறும்படங்கள் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் அமைப்புக்களுக்கு சவால்விடும் மற்றும் சமத்துவத்தின் குரலை எதிரொலிக்ககூடியன. பெண்களை கீழ்த்தரமான, பலவீனமான மற்றும் அதிகாரம் குறைந்த நிலைக்குத் தள்ளும் ஆணாதிக்க அமைப்புக்களை சித்தரித்து பெரிய மாற்றுகளை நிறுவும் சக்தியும் அவைகளுக்கு உண்டு. மிக முக்கியமாக, உணர்ச்சிகரமான ஈடுபாட்டின் மூலம் மக்களை மாற்றும் ஊடகமாக சினிமா பரவலாக பயன்படுத்தப்படுவதால் உணர்ச்சிகரமான கதை சொல்லல் மூலம் மக்களின் பார்வைகளையும் வாழ்க்கையையும் மாற்றும் கடமையை குறும்படங்களால் செய்யமுடியும்.
Find out moreகுறும்படம் என்றால் என்ன? குறும்படம் என்றால் என்ன என்பதற்குப் பல வரையறைகள் இருக்கலாம். சிலர் காலத்தின் அடிப்படையில் அதை வரையறுக்கலாம். சிலர் அதை முழுநீளத் திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் வரையறுக்கலாம். இருப்பினும் சுருக்கமாக ஒரு குறும்படம் என்பது ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட செறிவான ஒலி ஒளிக் கதையாகும். இது முக்கிய கதாபாத்திரத்தின் ஒரு குறிப்பிட்ட பயணத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு திரைப்படத்துடன் ஒப்பிடும்போது ஒரு குறும்படத்தின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்புகள் எவை? கால அளவு குறுகியது (வழக்கமாக 40 நிமிடங்களுக்கும் குறைவானது). ஆனால் பலர் சராசரியாக 10-20 நிமிடங்கள் வரை குறும்படங்களை உருவாக்குகின்றனர். நீங்கள் ஏதேனும் சர்வதேச திரைப்பட விழாக்களை இலக்காக கொண்டால், அதற்கேற்றவாறு கால அளவு மாறுபடலாம். தொடர்ச்சியான சம்பவங்களால் உருவாக்கப்படும் சிக்கலான கதைகள் அல்லது கதைக்களங்களைக் கொண்டுள்ள முழுநீளத் திரைப்படங்களுக்கு மாறாக குறும்படங்கள் ஒற்றை அல்லது ஒரு முக்கிய சம்பவத்தை கொண்டதாக இருக்கும். குறும்படமானது ஓர் மையக்கதாபாத்திரத்தின் குறுகிய காலப்பயணத்தை…
Find out more58 Howard Street #2 San Francisco
info@digizen.edu.lk
Links
Support
© 2023 Digizen University Web Developed by Apply Bright Solutions